Tamil – Boost PR http://boostpr.lk Boost PR Sri Lanka is a Public Relations Digital Agency in Sri Lanka Thu, 28 May 2020 13:25:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 http://boostpr.lk/wp-content/uploads/2020/11/cropped-sample-logo-3-1-32x32.jpg Tamil – Boost PR http://boostpr.lk 32 32 194787867 Samsung, டயலொக் மற்றும் MyDoctor, சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது http://boostpr.lk/samsung-%e0%ae%9f%e0%ae%af%e0%ae%b2%e0%af%8a%e0%ae%95%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-mydoctor-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-%25e0%25ae%259f%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-mydoctor-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25be Thu, 28 May 2020 13:25:19 +0000 http://boostpr.lk/?p=420 கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MyDoctor App இன் மூலம் அரசாங்கத்தின் eHealth ஊடாக இலவச டெலிமெடிசின் சேவைகளை வழங்க சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்திற்கு (MOH) Samsung tablets> இணைப்பு மற்றும் டெலிமெடிசின் தீர்வுகளை மூன்று ஆண்டுகளுக்கு  தொடர்ச்சியான பயன்பாட்டிற்காக Samsung Global  மற்றும் MyDoctor உடன் கூட்டிணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியானது […]

The post Samsung, டயலொக் மற்றும் MyDoctor, சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது appeared first on Boost PR.

]]>
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MyDoctor App இன் மூலம் அரசாங்கத்தின் eHealth ஊடாக இலவச டெலிமெடிசின் சேவைகளை வழங்க சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்திற்கு (MOH) Samsung tablets> இணைப்பு மற்றும் டெலிமெடிசின் தீர்வுகளை மூன்று ஆண்டுகளுக்கு  தொடர்ச்சியான பயன்பாட்டிற்காக Samsung Global  மற்றும் MyDoctor உடன் கூட்டிணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியானது அரசாங்கத்திற்கு எவ்விதமான செலவும் இன்றி, நாடு முழுவதும் உள்ள 16 முக்கிய பொது மற்றும் போதனா வைத்தியசாலைகளில் காணப்படும் தொற்று நோய் இன்றிய (Non-Communicable Disease) கிளினிக்குகளை டிஜிட்டல் மயமாக்குவதையும்  கோவிட் -19 தாக்கத்தில் பாதிக்கப்பட்ட NCD நோயாளிகளுக்கு அவர்களின் வழக்கமான மருத்துவருடன் அடிக்கடி ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வதனையும் இலகுபடுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  

இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் சுகாதார தீர்வு வழங்குனரான MyDoctor> மருத்துவமனைகளில் இருந்து தொலைதுர்ரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கான நோய்களை கண்டறிந்து அவர்களுக்கான சிகிச்சையினை வழங்க  ஆலோசகர்களுக்கு உதவும் வகையில் தனது டிஜிட்டல் சுகாதார தளத்தை பயன்பாட்டிற்காக வழங்குகின்றது. இந்த Samsung சாதனங்கள் டயலொக் 4G இணைப்பால் இயக்கப்படும் MyDoctor  இல் இருந்து டிஜிட்டல் ஹெல்த் தீர்வுகளுடன் வைத்தியர்கள் அந்தந்த நோயாளிகளுடன் ஆடியோ / வீடியோ அழைப்புகளில் ஈடுபடவும், மருந்தக மருந்துகளை வழங்கவும் (pharmacy prescriptions) மற்றும் MyDoctor App மூலம் ஆய்வக முடிவுகளை வழங்குவதுடன், சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்றும் ஏனைய நோயாளிகளுக்கும் நோய் தொற்று ஏற்படுவதையும் கணிசமானளவு குறைக்கின்றது. இத்தகைய ஆலோசனை செயல்முறைகள் மிகவும் திறமையாகவும், நோயாளிகள் மீதான சுமையை குறைக்கவும் வாய்ப்பளிக்கின்றது. 16 மருத்துவமனைகளில் இந்த செயற்றிட்டமானது வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன் MOH இன் NCD துறை, மற்ற மருத்துவமனைகளுக்கு சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போது சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி கருத்து தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் உள்ள 16 முக்கிய பொது மற்றும் போதனா வைத்தியசாலைகளில் சிறந்த இணைப்பு, சாதனங்கள், டெலிமெடிசின் தீர்வுகளை வழங்கி போதனா வைத்தியசாலைகள் மற்றும்  தொற்றுநோயற்ற (NCD) கிளினிக்குகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்த தேசிய முயற்சியில் எங்களுக்கு ஆதரவளித்த டயலொக், Samsung மற்றும் MyDoctor ஆகிய நிறுவனங்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த கோவிட் -19 தொற்று நோயின் நெருக்கடிக்கு மத்தியிலும் முக்கிய  சந்தர்ப்பத்திலும் தீர்வுகளை எங்களுக்கு வழங்கியதற்காக டயலொக், Samsung மற்றும் MyDoctor ஆகிய நிறுவனங்களுக்கு நாங்கள் குறிப்பாக நன்றி கூறுகிறோம்” என தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், “கோவிட் – 19 க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவுவதற்கான எங்கள் முயற்சிகளில், இந்த டெலிமெடிசின் தீர்வை செயல்படுத்திய Samsung Global மற்றும் MyDoctor க்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் முற்போக்கான அணுகுமுறையினை கொண்ட சுகாதார அமைச்சகத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நாட்டின் eHealth முறையை மேலும் செயல்படுத்துவதும், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களுக்கான டிஜிட்டல் சுகாதார தலையீடுகளின் சமமான அணுகல் மற்றும் நிலையான வளர்ச்சியை எளிதாக்குவதுமே இந்த நீண்டகால தீர்வுகளுக்கான எங்கள் நோக்கமாகும்” என கூறினார்.

Samsung நிறுவனத்தின் இலங்கையின் நிர்வாக இயக்குனர் Kevin SungSu YOU கருத்து தெரிவிக்கையில், இந்த கோவிட் – 19 காலகட்டத்தில் NCD நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முயற்சியில் நாடு முழுவதும் உள்ள 16 முக்கிய மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக மிக சமீபத்திய Samsung tablets களை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த சரியான நேரத்தில் டயலொக் மற்றும் MyDoctor உடன் கூட்டிணைந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மருத்துவமனைகளின் டெலிமெடிசின் நோக்கங்களுக்காக டயலொக் வழங்கிய இணைப்பால் இயக்கப்படும் Samsung Tab களில் MyDoctor App  நிறுவப்படும்.  மேம்பட்ட சுகாதாரத்துறையின் சிறப்பான செயற்பாட்டிற்கு நம்பகமான தொழில்நுட்பம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் சுகாதார வல்லுனர்களையும் நோயாளிகளையும் மேம்படுத்துவதற்கான இந்த தொலைநிலை நோயாளி சிகிச்சை முயற்சியுடன் நாங்கள் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். தற்போது நாடு எதிர்கொள்ளும் சவாலுக்கு எல்லா வகையிலும் பங்களிப்பினை வழங்குவதில் Samsung உறுதியாக உள்ளது” என தெரிவித்தார்.

MyDoctor,  தலைமை நிர்வாக அதிகாரி திரு சமீர விஜேரத்ன கூறுகையில், இந்த தேசிய முயற்சிக்கு டயலொக், Samsung மற்றும் சுகாதார அமைச்சுடன்  கூட்டிணைந்ததையிட்ட நாங்கள் நன்றி கூறுகின்றோம். MyDoctor app இன் மூலம் நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்த படியே இலகுவாக கிளினிக்குகளை அணுகுவதற்கான வாய்ப்பினை கொண்டுள்ளார்கள். மேலும், நோயாளிகள் எதிர்கால குறிப்புகளுக்காக App இல் அவர்களின் அனைத்து சுகாதார பதிவுகளையும் மருந்துகளையும் பதிவேற்றவும் பராமரிக்கவும் முடியும்.  இதனால், மருத்துவர்களின் ஆலோசனைகளைத் தொடங்குவதற்கு முன்பு நோயாளிகளின் இந்த சுகாதார சுயவிவரங்களை தொலைதூரத்தில் இருந்தே MyDoctor app வழியாக அணுக முடியும்.  இலங்கையில் சுகாதார முறையை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்த பிரமாண்டமான நடவடிக்கையை மேற்கொண்டதில் சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்” என கூறினார்.

(மேல் உள்ள படத்தில்) டெலிமெடிசின் தீர்வுகளைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் உள்ள நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்

படத்தில் இடமிருந்து வலம் :

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் – கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி, Samsung நிறுவனத்தின் இலங்கையின் நிர்வாக இயக்குனர் Kevin SungSu YOU, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, Samsung நிறுவனத்தின் இலங்கையின் சிரேஷ்ட இயக்குனர், வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவர்,  Hogyun Park, MyDoctor, தலைமை நிர்வாக அதிகாரி திரு சமீர விஜேரத்ன

The post Samsung, டயலொக் மற்றும் MyDoctor, சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது appeared first on Boost PR.

]]>
420
டயலொக் ஆசிஆட்டா மற்றும் Huawei ஆகியவை சுகாதார அமைச்சுடன் பங்காளர்களாக இணைந்து Telepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்குகின்றது http://boostpr.lk/%e0%ae%9f%e0%ae%af%e0%ae%b2%e0%af%8a%e0%ae%95%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-huawei/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-huawei Thu, 14 May 2020 05:17:06 +0000 http://boostpr.lk/?p=403 இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மற்றும் Huawei Technologies Lanka Co., (Pvt) Ltd, Huawei Technologies Co., Ltd,  ஆகியவை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சுடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் தேர்தெடுக்கப்பட்ட, 30 மருத்துவமனைகளுக்கு Telepresence இணைப்பு வசதிகளை வழங்கியுள்ளது. இந்த முற்று முழுதான  Telepresence தளமானது சுகாதார அமைச்சுக்கு தேசிய eHealth தளத்தின் ஊடாக சுகாதார பராமரிப்பு, சுகாதார கல்வி மற்றும் சுகாதார தகவல் சேவைகளை வழங்க […]

The post டயலொக் ஆசிஆட்டா மற்றும் Huawei ஆகியவை சுகாதார அமைச்சுடன் பங்காளர்களாக இணைந்து Telepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்குகின்றது appeared first on Boost PR.

]]>
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மற்றும் Huawei Technologies Lanka Co., (Pvt) Ltd, Huawei Technologies Co., Ltd,  ஆகியவை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சுடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் தேர்தெடுக்கப்பட்ட, 30 மருத்துவமனைகளுக்கு Telepresence இணைப்பு வசதிகளை வழங்கியுள்ளது. இந்த முற்று முழுதான  Telepresence தளமானது சுகாதார அமைச்சுக்கு தேசிய eHealth தளத்தின் ஊடாக சுகாதார பராமரிப்பு, சுகாதார கல்வி மற்றும் சுகாதார தகவல் சேவைகளை வழங்க இது உதவுகின்றது..

தொலைதூர மருத்துவ நிபுணர் ஆலோசனைகள், மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி, சுகாதார தகவல் சேவைகள், தொலைதொடர்பு, நேரடி video conferencing போன்ற டிஜிட்டல் தகவல்தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் கள பணியாளர்களுக்கான மொபைல் அணுகல் உள்ளிட்ட தடுப்பு, ஊக்குவிப்பு, நோய் தீர்வு மற்றும் புனர்வாழ்வு பராமரிப்பு வழங்கல் போன்றவை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த தீர்வின் முக்கிய நன்மைகளில் ஒன்று என்னவென்றால், அனைத்து நிபுணர்களையும் கொழும்புக்கு வரவழைக்க வேண்டிய அவசியமின்றி இப்போது பிராந்தியங்களில் இருந்தவாரே ஒருங்கிணைக்க முடியும். இது video conferencing,  மருத்துவ ஆலோசனைகள் பற்றி விவாதிக்கää உயர் நிபுணர்களின் விளக்கத்திற்கான வசதிகளுக்கு இடையில் முன்னோக்கி சோதனைகளை மேற்கொள்ளல், புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரவை தொடர்ந்து பகிர்வதன் மூலம் நோயாளிகளைக் கண்காணித்தல், சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், மருத்துவமனைகள் மற்றும் வசதிகளுக்கு இடையில் ஒருங்கிணைத்தல், தொழில்முறை ஆரோக்கியத்தை மேற்கொள்ளுதல் தொடர்புடைய கல்வி மற்றும் பொது சுகாதார நிர்வாகத்தை நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். மேலும், இந்த தீர்வுகளின் மற்றொரு நன்மை என்னவென்றால், தொலைதூர தேசிய மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் மருத்துவம் தொடர்பான தகவல்களைப் பயிற்சி வைத்தியசாலையில் உள்ள சிறப்பு வை;தியர்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும்.

Huawei Technologies,  Telepresence ஒத்துழைப்பு தீர்வுகளை வழங்குவதோடு, சுகாதார அமைச்சால்  நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தேவையான தீர்வுகளை நிறுவுவதோடு, மூன்று வருட காலத்திற்கு பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளை இலவசமாக வழங்கும்.  டயலொக், மூன்று வருட காலத்திற்கு 30 மருத்துவமனைகளை இணைக்கும் இலவச இணைப்புகளை வழங்குவதன் மூலம் இந்த முயற்சிக்கு தனது ஆதரவினை நல்குகின்றது.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி கருத்து தெரிவிக்கையில் “இந்த நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முழுமையாக உதவியதற்காக டயலொக் மற்றும் Huawei ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். தற்போது நாடு முழுவதிலுமிருந்து சுகாதாரப் பாதுகாப்பு வல்லுனர்கள் அனைத்து வகையான கலந்துரையாடல்களுக்கும் கொழும்புக்கு வருகை தர வேண்டியுள்ளது. ஆனால் இப்போது இந்த தீர்வுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் மற்றும் அனைத்து நிபுணர்களையும் கொழும்புக்கு அழைத்து வருவதைத் தவிர்க்கலாம் என கூறினார்.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்ஹ  கருத்து தெரிவிக்கையில், சுகாதார அமைச்சுக்கு இந்த Telepresence தீர்வுகளை எளிதாக்கியதற்காக டயலொக் மற்றும் Huawei ஆகியோருக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தேசிய கூட்டு eHealth அமைப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள 30 மருத்துவமனைகளின் சுகாதார வழங்குனர்களை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தவும், எல்லைகளை கடந்து அணுகவும்;, ஒத்துழைப்பு மற்றும் வள பகிர்வுகளை ஊக்குவிக்கும் போது திறம்பட கவனிப்பை வழங்கவும் உதவுகிறது. இந்த கோவிட் -19 தொற்றுநோய்க்கு அவசியமாக தேவைப்படும் இந்த வசதிகளை வழங்கியதற்காக டயலொக் மற்றும் Huawei ஆகியோருக்கு நாங்கள் குறிப்பாக நன்றி கூறுகிறோம்” என தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில் “நாடு முழுவதும் உள்ள சுகாதார நிபுணர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவு பகிர்வுக்கு வசதியாக மிக சமீபத்திய Telepresence உள்கட்டமைப்பை பயன்படுத்துவதற்கான இந்த முயற்சியில் எங்களுடன் கூட்டிணைந்த  Huawei மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த மையப்படுத்தப்பட்ட eHealth அமைப்பு தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மற்றும் அதற்கு அப்பால் நம் நாட்டிற்கு சேவை  செய்ய உதவும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு மேம்பட்ட video conferencing அனுபவத்தின் மூலம் சுகாதார நிபுணர்களிடையே நெருக்கமான ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது. எங்கள் மக்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிறந்த தொழில்நுட்பத்திற்கான அணுகலை வழங்க நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

“பௌத்த தம்மபத வசனங்களில் உள்ளவாறு” ஆரோக்கியமே எமது செல்வமாகும்” Huawei Technologies Lanka Co (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Liang Yi கருத்து தெரிவிக்கையில், “புதுமையான ICT தீர்வுகள் மூலம் தற்போதைய சூழ்நிலைகளுடன் போராட உதவ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் கூட்டிணைந்தமை எங்களுக்கு மரியாதையளிக்கின்றது. முழு இலங்கை தேசமும் மகத்தான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நாங்கள் ஒன்றாக சவாலை சமாளித்து ஆரோக்கியமான வாழ்க்கையை இந்த அழகான தீவுக்கு வழங்குவோம்” என கூறினார்.

மேல் உள்ள படம்: நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு வல்லுனர்கள் எவ்வாறு தொலைத் தொடர்பு தீர்வுகள் மூலம் ஒன்றிணைக்க முடியும் என்பது பற்றியதாகும்.

 (கீழ் உள்ள படத்தில்)) இடமிருந்து வலம்: Huawei Technologies Lanka Co.,  (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி Liang Yi, சுகாதார  மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்கடர் அனில் ஜாசிங்ஹ, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ.

The post டயலொக் ஆசிஆட்டா மற்றும் Huawei ஆகியவை சுகாதார அமைச்சுடன் பங்காளர்களாக இணைந்து Telepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்குகின்றது appeared first on Boost PR.

]]>
403
டயலொக் ஆசிஆட்டா நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் ICU இனை விரிவுப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளது http://boostpr.lk/%e0%ae%9f%e0%ae%af%e0%ae%b2%e0%af%8a%e0%ae%95%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25af%2581 Mon, 04 May 2020 16:23:57 +0000 http://boostpr.lk/?p=358 சுகாதார அமைச்சினால் (MOH) தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICU திறன் மேம்பாட்டிற்கு இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஏற்கனவே வழங்கிய ரூ.2000 இலட்சம் உறுதி மொழிக்கு அமைய அதன் முதல் கட்டமாக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில், ICU விரிவுபடுத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இச் செயற்பாடானது கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுமல்லாமல், சுகாதார வழங்குனர்களின் நேரடி உயிர் காக்கும் நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவளிப்பதற்கும், தீவிர சிகிச்சைக்கான அணுகலை கணிசமாக அதிகரிப்பதற்கும், […]

The post டயலொக் ஆசிஆட்டா நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் ICU இனை விரிவுப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளது appeared first on Boost PR.

]]>
சுகாதார அமைச்சினால் (MOH) தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICU திறன் மேம்பாட்டிற்கு இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஏற்கனவே வழங்கிய ரூ.2000 இலட்சம் உறுதி மொழிக்கு அமைய அதன் முதல் கட்டமாக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில், ICU விரிவுபடுத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இச் செயற்பாடானது கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுமல்லாமல், சுகாதார வழங்குனர்களின் நேரடி உயிர் காக்கும் நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவளிப்பதற்கும், தீவிர சிகிச்சைக்கான அணுகலை கணிசமாக அதிகரிப்பதற்கும், ஏனைய அனைத்து நோயாளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் மற்றும் நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவியாக இருக்கும்.

டயலொக் ஆசிஆட்டாவின் நிதியுதவி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவமனை கட்டுமானம் மற்றும் சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்ட ICU கட்டிட தொகுதி மேம்பாடானது, மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவு (MICU), அறுவை சிகிச்சைää தீவிர சிகிச்சை பிரிவு (SICU) ஆகியவற்றுடன் ஒரு முழுமையான ICU வளாகத்தை  நிறுவி 4 படுக்கைகளிலிருந்து 10 படுக்கைகள் வரை விரிவுப்படுத்துவதுடன் அதிநவீன ICU  உபகரணங்களையும் முழுமையாக வழங்கியுள்ளது. டயலொக் ஆசிஆட்டாவின் இவ் முயற்சியானது மருத்துவமனையின் ICU வசதியை விரிவுப்புடுத்துவதற்கும், தீவிர சிகிச்சையில் மருத்துவ பட்டதாரிகளுக்கு மேலும் பயிற்சியளிப்பதற்கும், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட சிக்கலான நோயாளிகள் உயிர்வாழ்வதற்கான அதிக வாய்ப்பளிப்பதற்கும் மாவட்டத்தில் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஊக்கியாகவும் செயல்படுகின்றது. 

நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நிஹால் வீரசூரிய கருத்து தெரிவிக்கையில், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதார அமைச்சினால் ஒரு சிறப்பு மருத்துவமனையாக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை இப்போது கோவிட் -19 உயர் ஆபத்துள்ள பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சேவையை செய்து வருகிறது. இருப்பினும்,  ICU தற்போது 4 படுக்கைகள் கொண்ட ஒரு சிறிய இடத்திலேயே அமந்துள்ளது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவை மீட்டெடுப்பதற்காக சுகாதார  அமைச்சுடன் இணைந்து டயலொக் மேற்கொண்டுள்ள இந்த உன்னத பணிக்கு நான் நன்றியுள்ளவனாகவும் பணிவுள்ளவனாகவும் இருக்கிறேன். ICU வின் இந்த உடனடி புதுப்பித்தல், விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் மூலம் நீண்ட காலத்திற்கு எங்கள் மக்களுக்கு இன்னும் அதிகளவான  சேவையை எங்களால் முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் மற்றும் ஆலோசகர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் “ஒரு தீவிர சிகிச்சை பிரிவு என்பது ஒரு நேரடி உயிர் காக்கும் மையமாகும். ஒருவருக்கு சுவாசிப்பதில் சிக்கல்கள் இருக்கும் போது, இதய செயலிழப்பு அல்லது இது போன்ற முக்கியமான உயிருக்கு ஆபத்தான பிரச்சினை இருக்கும் போது, உடல் ஏனைய மருந்துகளுடன் மீட்கப்படும் வரை அவர்களின் உயிர் வாழ்வை நீடிக்க தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செயற்கை சுவாச உபகரணங்கள் போன்ற சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவின் உதவியுடன் மக்களின் வாழ்க்கையில் நாங்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்,  அதற்காக எங்களுடன் முக்கியமான பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மேலும் பல சேவைகளை செய்வதற்கும், உயிர்களை காப்பாற்றுவதற்கும் எங்களுக்கு உறுதுணையளிக்கும் டயலொக்கிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என மேலும் தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தீவிர சிகிச்சை வசதிகள் மற்றும் சுகாதார அமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான தேவை அதிகரித்து வரும் வேலையில், நாங்கள் சுகாதார அமைச்சினால் (MOH) தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICU திறன் மேம்பாட்டிற்கு ரூ.2000 இலட்சத்தினை வழங்கியுள்ளோம். மற்றும் இச் செயற்பாட்டின் முதல் கட்டமாக சுகாதார பராமரிப்பு வழங்குனர்களை ஆதரிப்பதற்காக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் ICU வசதிகளை உடனடியாக கட்டுமான புனரமைப்பு செய்வதை ஆரம்பித்து வைப்பதையிட்டு நாங்கள்  மகிழ்ச்சியடைகிறோம். இந்த ICU மேம்பாடானது அவர்களின் நேரடி உயிர் காக்கும் நடவடிக்கைகளுடன், கோவிட் -19 தொடர்பான சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், நீண்டகாலமாக தீவிர சிகிச்சைகள் தேவைப்படும் ஏனைய அனைத்து நோயாளிகளுக்கும் முக்கியமான கவனிப்புகளுகக்கான அணுகலை கணிசமாக அதிகரிக்கும்” என தெரிவித்தார்.

The post டயலொக் ஆசிஆட்டா நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் ICU இனை விரிவுப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளது appeared first on Boost PR.

]]>
358