சுகாதார அமைச்சினால் (MOH) தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICU திறன் மேம்பாட்டிற்கு இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஏற்கனவே வழங்கிய ரூ.2000 இலட்சம் உறுதி மொழிக்கு அமைய அதன் முதல் கட்டமாக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில், ICU விரிவுபடுத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இச் செயற்பாடானது கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுமல்லாமல், சுகாதார வழங்குனர்களின் நேரடி உயிர் காக்கும் நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவளிப்பதற்கும், தீவிர சிகிச்சைக்கான அணுகலை கணிசமாக அதிகரிப்பதற்கும், ஏனைய அனைத்து நோயாளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் மற்றும் நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
டயலொக் ஆசிஆட்டாவின் நிதியுதவி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவமனை கட்டுமானம் மற்றும் சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்ட ICU கட்டிட தொகுதி மேம்பாடானது, மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவு (MICU), அறுவை சிகிச்சைää தீவிர சிகிச்சை பிரிவு (SICU) ஆகியவற்றுடன் ஒரு முழுமையான ICU வளாகத்தை நிறுவி 4 படுக்கைகளிலிருந்து 10 படுக்கைகள் வரை விரிவுப்படுத்துவதுடன் அதிநவீன ICU உபகரணங்களையும் முழுமையாக வழங்கியுள்ளது. டயலொக் ஆசிஆட்டாவின் இவ் முயற்சியானது மருத்துவமனையின் ICU வசதியை விரிவுப்புடுத்துவதற்கும், தீவிர சிகிச்சையில் மருத்துவ பட்டதாரிகளுக்கு மேலும் பயிற்சியளிப்பதற்கும், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட சிக்கலான நோயாளிகள் உயிர்வாழ்வதற்கான அதிக வாய்ப்பளிப்பதற்கும் மாவட்டத்தில் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஊக்கியாகவும் செயல்படுகின்றது.
நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நிஹால் வீரசூரிய கருத்து தெரிவிக்கையில், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதார அமைச்சினால் ஒரு சிறப்பு மருத்துவமனையாக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை இப்போது கோவிட் -19 உயர் ஆபத்துள்ள பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சேவையை செய்து வருகிறது. இருப்பினும், ICU தற்போது 4 படுக்கைகள் கொண்ட ஒரு சிறிய இடத்திலேயே அமந்துள்ளது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவை மீட்டெடுப்பதற்காக சுகாதார அமைச்சுடன் இணைந்து டயலொக் மேற்கொண்டுள்ள இந்த உன்னத பணிக்கு நான் நன்றியுள்ளவனாகவும் பணிவுள்ளவனாகவும் இருக்கிறேன். ICU வின் இந்த உடனடி புதுப்பித்தல், விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் மூலம் நீண்ட காலத்திற்கு எங்கள் மக்களுக்கு இன்னும் அதிகளவான சேவையை எங்களால் முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.
நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் மற்றும் ஆலோசகர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் “ஒரு தீவிர சிகிச்சை பிரிவு என்பது ஒரு நேரடி உயிர் காக்கும் மையமாகும். ஒருவருக்கு சுவாசிப்பதில் சிக்கல்கள் இருக்கும் போது, இதய செயலிழப்பு அல்லது இது போன்ற முக்கியமான உயிருக்கு ஆபத்தான பிரச்சினை இருக்கும் போது, உடல் ஏனைய மருந்துகளுடன் மீட்கப்படும் வரை அவர்களின் உயிர் வாழ்வை நீடிக்க தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செயற்கை சுவாச உபகரணங்கள் போன்ற சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவின் உதவியுடன் மக்களின் வாழ்க்கையில் நாங்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம், அதற்காக எங்களுடன் முக்கியமான பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மேலும் பல சேவைகளை செய்வதற்கும், உயிர்களை காப்பாற்றுவதற்கும் எங்களுக்கு உறுதுணையளிக்கும் டயலொக்கிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என மேலும் தெரிவித்தார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தீவிர சிகிச்சை வசதிகள் மற்றும் சுகாதார அமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான தேவை அதிகரித்து வரும் வேலையில், நாங்கள் சுகாதார அமைச்சினால் (MOH) தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICU திறன் மேம்பாட்டிற்கு ரூ.2000 இலட்சத்தினை வழங்கியுள்ளோம். மற்றும் இச் செயற்பாட்டின் முதல் கட்டமாக சுகாதார பராமரிப்பு வழங்குனர்களை ஆதரிப்பதற்காக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் ICU வசதிகளை உடனடியாக கட்டுமான புனரமைப்பு செய்வதை ஆரம்பித்து வைப்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ICU மேம்பாடானது அவர்களின் நேரடி உயிர் காக்கும் நடவடிக்கைகளுடன், கோவிட் -19 தொடர்பான சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், நீண்டகாலமாக தீவிர சிகிச்சைகள் தேவைப்படும் ஏனைய அனைத்து நோயாளிகளுக்கும் முக்கியமான கவனிப்புகளுகக்கான அணுகலை கணிசமாக அதிகரிக்கும்” என தெரிவித்தார்.